ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் பயனர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை மாற்றாவிட்டால் நிறுவனத்தின் ஆண்டு வருவாயில் 6% வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடகப் பக்கங்களில் உள்ள சில அம்சங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சரியாகக் கையாளவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தானாகவே அடுத்தடுத்து வீடியோக்கள் ஓடும் 'ஆட்டோபிளே' (Autoplay), முடிவில்லாமல் பக்கங்களை நகர்த்திக்கொண்டே இருக்கும் 'இன்ஃபினைட் ஸ்க்ரோல்' (Infinite Scroll) மற்றும் ரீல்ஸ் (Reels) போன்ற அம்சங்கள் பயனர்களைத் தொடர்ந்து செயலியைப் பயன்படுத்தத் தூண்டி அடிமையாக்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மெட்டா வழங்கியுள்ள நேர மேலாண்மைக் கருவிகள் எளிதாகத் தவிர்க்கும் வகையிலும், பெற்றோருக்கான கட்டுப்பாட்டு வசதிகள் (Parental Controls) பயன்படுத்துவதற்குக் கடினமாகவும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்துடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்தச் செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க மெட்டா தவறிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் விளக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் பென் வால்டர்ஸ் கூறுகையில், "இந்த விசாரணை தொடங்கியதில் இருந்தே, பதின்ம வயதினரைப் பாதுகாப்பதற்காக 'டீன் அக்கவுண்ட்ஸ்' (Teen Accounts) என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் இரவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதைத் தடுக்கவும், தினசரி பயன்படுத்தும் நேரத்தை 15 நிமிடங்களாகக் குறைக்கவும் பெற்றோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்த வடிவமைப்புகளை மாற்றி, ஆட்டோபிளே போன்ற அம்சங்களை முடக்க மெட்டா நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது. இதனைச் செய்யத் தவறினால், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய ஆண்டு வருவாயில் 6% வரை அபராதம் விதிக்கப்படும். இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு மெட்டா நிறுவனம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கலாம். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் கொண்டு வரப்பட்டது போல, ஐரோப்பிய ஒன்றியமும் குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7