திமுக ஆட்சியில் 2226 கோயில்களில் குடமுழுக்கு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 85.24 கன அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அமராவதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.
மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வண்ணாரப் பேட்டையில் போதையில் ரகளை செய்த திமுக வழக்கறிஞரைக் கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு காவலர்களிடம் மதுபோதையில் தம்பதியினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடவுள்ள நிலையில், சோனியாவும் ராகுலும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.109க்கு விற்பனையாகிறது.