K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

கனமழை எதிரொலி... சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் பெய்த கனமழையால் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மதுரையை பாதித்த வெள்ளம்... அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர்

மதுரை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செல்லூரில் ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மிரட்டல் விடுத்த மர்ம நபர்... பரபரப்பான சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் படையினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.

திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வார்த்தை போர்... நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவையில் சபை நாகரிகம் இல்லாமல் பேசினால் வெளியேற்றப்படுவீர்கள் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

கால்பந்து விளையாட்டு மைதானம் தனியார் மயம்... தீர்மானம் வாபஸ்

சென்னையில் செயற்கை புல் கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை திரும்பப்பெற மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மாநகராட்சியின் இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர்- பசும்பொன் தேவரை புகழ்ந்த விஜய்

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சட்டென மாறிய வானிலை... சென்னையை குளிர்வித்த மழை

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.

மதுரையில் இளைஞர்கள் அட்ராசிட்டி - வேகமாக பரவும் வீடியோ

மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆபத்தான முறையில் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜவுளி வியாபாரிகள் சாலை மறியல்.. ஈரோட்டில் பயங்கர பரபரப்பு

ஈரோட்டில் மாநகராட்சி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், சாலையோர ஜவுளி கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜூவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 6 மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.