K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

"இர்ஃபானை மன்னிக்க முடியாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் நகைகள் கொள்ளை - பகீர் வீடியோ வெளியீடு

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உணவக உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அணை நீர்வரத்து அதிகரிப்பு.. 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்... வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

ரூ.411 கோடி ஊழல் புகார்.. சிக்குகிறாரா ராஜ கண்ணப்பன்?

அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை சூறையாடியுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெருங்கியதா ஆபத்து..? 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடக்கு அந்தமான் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று இரவு ‘டானா’ புயலாக வலுப்பெற உள்ள நிலையில் பாம்பன், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகி உயிரிழப்பு - கதறி அழுத ஆனந்த்.. மன வேதனையில் விஜய் வெளியிட்ட பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் உடல்நலகுறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சரவணின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

"வருத்தமா இருக்கு.." காரணத்தோடு புது புயலை கிளப்பிய இபிஎஸ்

தமிழ்நாடு போதைப்பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கவரப்பேட்டை ரயில் விபத்து.. ஆக்‌ஷனில் இறங்கிய ரயில்வேத்துறை - 4 பேருக்கு சம்மன்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்