K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

'கண்டா வரச் சொல்லுங்க’ மதுரை எம்பிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்..

மதுரை பாராளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்பியாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்லாத எம்பி சு வெங்கடேசனை கண்டா வரச் சொல்லுங்க என அப்பகுதி மக்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுவரில் மோதிய பஸ்.. ஜஸ்ட் மிஸ்!! - டிரைவரால் பிழைத்த 10 உயிர் - திக் திக் காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

12 மாவட்டங்களில் டேஞ்சர்..! - ருத்ரதாண்டவம் ஆடப்போகும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோரமுகத்தை காட்டும் கடல்.. கதி கலங்கிய குமரி மக்கள்.. - வரப்போகிறதா ஆபத்து..?

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு..! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திருப்பதியில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில், மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.  

தீவாக மாறிய திருவொற்றியூர் - கடும் அவலம் - அதிர்ச்சி காட்சி

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வாகன ஓட்டிகளே ரிஸ்க் வேண்டாம்.. தத்தளிக்கும் மாதவரம்..!

சென்னை மாதவரம் வடதிருப்பாக்கம், வடகரை ஆகிய முக்கிய சாலைகளில் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்.. சென்னையின் முக்கிய சாலையில் இப்படியா..?

சென்னையில் பெய்து வந்த கனமழை ஓய்ந்தும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதால் அரசு உடனடியாக இதை சீர் செய்து தர வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர். 

விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் - அந்த வழி போகாதீங்க.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சேலம் மாவட்டம் மஞ்சக்குட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதையடுத்து வரிசையாக மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

#JUSTIN || வைகை ஆற்றில் புரளும் வெள்ளம்.. கழுகு காட்சி | Kumudam News 24x7

தொடர்ந்து மழை பெய்தால் அருகே உள்ள கண்மாய்களும் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.