BREAKING | த.வெ.க.வை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்?
தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
மகாவிஷ்ணு கைது கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் இப்போது காவல்துறை வ்சம் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விநாயகர் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் விநாயகருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்தனர்.
அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.