K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

BREAKING | முட்புதரில் மயங்கி கிடந்த மூதாட்டி.. பாவமே பார்க்காத 2 கொடூரன்கள் - வெளிவந்த திக் திக் பின்னணி...!

தென்காசி சங்கரன்கோவிலில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூதாட்டியை வாகைக்குளத்தில் கொண்டுவிடுவதாக கூறி அழைத்துச் சென்ற மர்மநபர்கள். பைக்கில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற 2 பேர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

#BREAKING | நிலச்சரிவு - முதற்கட்டமாக 5 பேர் மீட்பு

தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் சிக்கித் தவிப்பு. முதற்கட்டமாக 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது

BREAKING | முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. அடுத்த 48 மணி நேரத்தில் புதிய முதலமைச்சர் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பேச்சு

#justin || சிபிஎம் அலுவலகத்தில் முதலமைச்சர்

சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.

#justin || த.வெ.க தலைவர் விஜய் ஓணம் வாழ்த்து

மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் - தமிழ் மற்றும் மலையாள மொழியில் ஓணம் வாழ்த்துகளை தனது X தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்

#JUSTNOW | அண்ணா உருவப்படத்திற்கு இபிஎஸ் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்தினார்

அரிதாரம் டூ அவதாரம்...மஹாவிஷ்ணு சுய புராணம்!

அரிதாரம் பூசும் சினிமாவில் தோற்றதால், ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் எடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாராம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் மஹாவிஷ்ணு. அரிதாரம் டூ அவதாரம் என மாறியிருக்கும் மஹாவிஷ்ணுவின் புராணம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...

#JUSTNOW | அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை: தொடர் விடுமுறை என்பதால் அண்ணாமலையார் கோயிலில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அதிகாலை முதலே குவிந்த அசைவப் பிரியர்கள். நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த மக்கள்

LIVE : சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி

சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி