K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

மகா விஷ்ணு மீது குவியும் புகார்கள்...

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Vinayagar Chaturthi 2024 : சென்னையில் விநாயகர் சிலை விற்பனை அமோகம்..

Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கோலகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பயன்படும் வகையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

மகா விஷ்ணுவின் நன்கொடை திருப்பி அளிக்கப்படுமா..? - கிடைத்த புதிய தகவல்

அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மகாவிஷ்ணு வழங்கிய நன்கொடை திருப்பி அளிக்கப்படுமா? என கேள்வி எழுந்த நிலையில் அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு... நாதக முன்னாள் நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த அரசுப் பள்ளி என்சிசி பயிற்சியாளர் கோபு மற்றும் நாம்தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கருணாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது

சென்னையில் இறங்கிய 16,500 போலீசார் - தீவிர பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை முழுவதும் 16, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சாமி ஆடி மயங்கி விழுந்த மாணவிகள் - மீண்டும் அரசு பள்ளியில் கிளம்பிய சர்ச்சை

School Students dance in Marudai BookFair: மதுரை புத்தக்கண்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருப்பசாமி பாடலை கேட்டு மாணவிகள் எழுந்து நின்று சாமியாடியதால் பரபரப்பு.

நான் எங்கும் ஓடிய ஒளியவில்லை "மதியம் 1 மணிக்கு வருவேன்.." - வாய் திறந்த மகாவிஷ்ணு!

Mahavishnu motivational speaker: சென்னை பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்த மகாவிஷ்ணு.

ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை... தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் அப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

பெண்கள் பாதுகாப்பு.. திமுக அரசை கடுமையாக சாடிய இபிஎஸ்

தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாது அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார் 

முதலமைச்சர் முன்னிலையில் 3 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.850 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது

நில மோசடி வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் சோதனை

நீலாங்கரை நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரில் காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு வீடு மற்றும் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்... எமனாக மாறிய பெற்றோர்கள்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் - பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 

விஜய்யின் தவெக மாநாடுக்கு அனுமதி கிடைக்குமா..?

மாநாடு நடத்துவது தொடர்பாக தவெகவினருக்கு போலீசார் எழுப்பிய 21 கேள்விகளுக்கு இன்று அக்கட்சி சார்பில் பதிலளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற்போக்கு கருத்துகளை கேள்வி கேளுங்கள் - மேடையில் விளாசிய அன்பில் மகேஷ்

கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்... அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்  

சவாரியை ரத்து செய்ததால் ஆத்திரம்.. பெண்ணை தாக்கிய ஓட்டுநர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சவாரியை ரத்து செய்த பெண்ணை, ஓலா ஆட்டோ ஓட்டுனர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு விவகாரம் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவசர ஆலோசனை

சென்னை பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு.. திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு

ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். அந்த சமயம் ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு, பாலத்தின் ஓரத்தில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பாக நின்ற பின்னர் ரயில் அவர்களை கடந்து சென்றது. 

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு.. சமூக வலைதளங்களில் கிளம்பிய எதிர்ப்பு

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளி மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவாளரை கொண்டு மாணவர்களுக்கு போதனை நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது

தவெக மாநாடு... திமுகவுக்கு பயம்.. - வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்

அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு உடலின் தன்மையும் எப்படி இருக்கும்? - ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி

ஒவ்வொரு உடலின் தன்மையும் எப்படி இருக்கும்? - ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி