#Live: திமுக பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
விமான சாகச ஒத்திகையை வேடிக்கை பார்த்தவரின் வீட்டு பால்கனி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மசாஜ் சென்டர் பெண் ஊழியர்களிடம் இளைஞர்கள் தவறாக நடக்க முயற்சித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்
சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம் மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருச்சூரில் ATM-களில் கொள்ளையடித்து நாமக்கல் வெப்படை அருகே சிக்கிய அரியானா கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வெடிவிபத்து தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
நாமக்கல் அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களுக்கு அரசு மருத்துவம்னையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் வான்வழி விமான சாகசத்தை பார்வையிட பிரதமர் மோடி அக்டோபர் 6ம் தேதி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கலில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.
தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி; தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரமாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பட்டாசு வெடிப்பது நின்றதால் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘Sorry No Comments’ என பதிலளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணையை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவரது சொத்து விவரங்களை கேட்டு 10 சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்கான மலர்க்கண்காட்சி 4 லட்சத்துக்கும் மேலான மலர்களுடனும், 25 ஆயிரம் மலர் தொட்டிகளுடனும் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.
சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருப்பதால் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பு
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில், காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்