K U M U D A M   N E W S

இந்தியர்களை பணியமர்த்த ட்ரம்ப் கடும் எதிர்ப்பு. அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவு!

ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை குறைத்துக் கொள்ள வேண்டும், இந்தியா மற்றும் சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை விட அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இரட்டை நிலைப்பாடு.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீதுள்ள தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

காப்பர், மருந்து பொருட்கள் மீது வரிவிதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காப்பர் (தாமிரம்) இறக்குமதியில் 50% வரியும், மருந்து பொருட்கள் இறக்குமதியில் 200% வரியும் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் நல்ல பையன்தான் - டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மிகவும் நல்லவர் அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் நிர்வாகத்தின் "மசோதா"வுக்கு எதிராக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் மேயர் தேர்தல்.. இந்திய வம்சாவளி வேட்பாளரை கடுமையாக சாடிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் பதவிக்காக போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல்.. 2 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்டும் - வெள்ளை மாளிகை அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல் தொடர்பாக அதிபர் டெனால்ட் ட்ரம்ப் 2 வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரான் சரணடைய வேண்டும் .. அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!

ஈரானில் உள்ள ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் மையத்தை தாக்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்.. 14 பேர் உயிரிழப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், உக்ரனை சேர்ந்த 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வானுயர கட்டடத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 44-க்கும் மேற்பட்டோர் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 வது நாளாக தொடரும் மோதல்.. இரு நாடுகளிலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 ஆவது நாளாக தொடரும் மோதலால் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 326 பேர் காயமடைந்துள்ளனர்.