K U M U D A M   N E W S

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

யானை வேட்டையாடியதாக விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்- அவசர வழக்காக இன்று விசாரணை!

தருமபுரியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மர்ம மரணம் தொடர்பாக மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி முறையீடு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.