K U M U D A M   N E W S

உயர்நீதிமன்றம்

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனு.. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நித்தியானந்தா-பிரேமானந்தா என்றாலே பிரச்சனைதான்.. உயர் நீதிமன்றம் கருத்து

நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவர்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் நித்தியானந்தா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை - டெல்லி உயர்நீதிமன்றம்

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வழக்குகளில், காவல்துறையினர்  குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்,  ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்ரூதின் வழக்குகளை விரைந்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமின் வழங்கும்போது நிபந்தனைகளை எளிதாக்க அறிவுறுத்தல்

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்

கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நயன்தாரா திருமண ஆவணப்படம்.. தனுஷ் வழக்கை நிராகரிக்க நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதிகளில் ஊதியத்தை சுருட்டிய அதிகாரிகள்.. உயர்நீதிமன்றம் அதிரடி

சிறைக்கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.