K U M U D A M   N E W S
Promotional Banner

எம்எஸ்சி எல்சா-3 கப்பல் விபத்து: எம்எஸ்சியின் அகிடேட்டா-2 கப்பலை சிறை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு!

எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சின்ன தல ஆன் போர்டு.. தமிழ் சினிமாவில் களமிறங்கும் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: அரசியல் சூழ்ச்சியை கண்டுபிடிக்க வேண்டும்- பா.ரஞ்சித்

“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை கண்டறிய வேண்டும்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.. எஸ்.பி.வேலுமணி

“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் எஸ்.பி. மிரட்டல்- இபிஎஸ் கண்டனம்

மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு?- அன்னதானம் வழங்கக்கூடாது என அறிவுறுத்தல்

அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் 250 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நம்பிக்கை

சாதி மத பேதமின்றி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரும் ஆபத்தை தடுக்க நாம் ஒரே குடையின் கீழ் வர வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை அறிவித்துள்ளார்

ஆப்ரேஷன் Melon: ரூ.1 கோடி மதிப்பிலான எல்எஸ்டி, கெட்டமைன், கிரிப்டோகரன்சி பறிமுதல்!

டார்க்நெட் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட “கெட்டாமெல்லன்” என்று அழைக்கப்படும் கும்பலைச் சேர்ந்த கொச்சின் சேர்ந்த எடிசன் பாபு என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. ஆப்ரேஷன் MELON என்ற சோதனை நடவடிக்கையில் 1 கோடிக்கும் அதிக மதிப்புள்ள எல்எஸ்டி, கெட்டமைன் மற்றும் கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

‘என்ன தவம் செய்தேன்..’ நடிகர் எஸ்.ஜே.சூர்யா உருக்கம்

“கில்லர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அனைவர்க்கும் நன்றி” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா!

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அரசியலமைப்பை பறிப்பதுதான் அவர்களின் திட்டம்.. ராகுல் காந்தி

ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே ஆர்எஸ்.எஸ். - பாஜகவுக்கு நோக்கம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

‘ஜானகி’ என்ற பெயரால் சர்ச்சை.. போராட்டம் அறிவித்த மலையாள திரையுலகம்

மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் 30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

'சோசலிஸ்ட்' & 'மதச்சார்பற்ற' வார்த்தைகள் நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.. தத்தாத்ரேய ஹோசபலே

அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா.. மோகன் பகவத் பங்கேற்பு

கோவை பேரூர் மடத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நீரை சேமிக்க வேண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அழிவிற்கு முன்பு நாம் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்.. அதிமுகவினர் உடலில் ஓடுவது ரத்தமா? பாஜக பாசமா? - ஆர்.எஸ்.பாரதி சாடல்

அண்ணாவின் பெயரைத் தாங்கிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.

ஓபிஎஸ் எம்.எல்.ஏ. பதவிக்கு சிக்கல்.. சபாநாயகர் அப்பாவு பதில்

ஓ.பன்னீர் செல்வத்தின் எல்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி அவரது தொகுதியை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் சட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்காக நள்ளிரவில் தியானம் – சிறப்பு பூஜை செய்த முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? டி.என்.பி.எஸ்.சி தலைவர் கொடுத்த அப்டேட்

குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பில்லை.. இபிஎஸ் குற்றசாட்டு

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்-இபிஎஸ்

அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தான் தமிழுக்கும், தமிழர்களுக்கு எதிரான கட்சி- வானதி சீனிவாசன் காட்டம்

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு இன்னும் திருந்தவில்லை.. இபிஎஸ் காட்டம்

நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன் 6) முதல் தொடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

"புலி வருது, புலி வருது".. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.