‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ - ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சனின் மனைவி மறுப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் எந்தவிதமான பணபரிமாற்றமும் நிகழவில்லை என இயக்குனர் நெல்சனின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் எந்தவிதமான பணபரிமாற்றமும் நிகழவில்லை என இயக்குனர் நெல்சனின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இயக்குநர் நெல்சனின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள மோனிஷா, இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சவுதி அரேபியாவிற்கு தப்பியோடிய மொட்டை கிருஷ்ணனை பிடிப்பதற்காக சர்வதேச போலீஸாரி உதவியை தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதானவர்களும், பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மருத்துவ மாணவியின் மரணம் ஒரு கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மமதா பானர்ஜி பெண்களுடன் இணைந்து பேரணி மேற்கொண்டார். ஆனால் மறுபக்கம் இந்த விவகாரத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.