ArvindKejriwal: ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால்... கொட்டும் மழையில் தொண்டர்கள் கொண்டாட்டம்!
மதுபான கொள்கை முறைகேடு கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
மதுபான கொள்கை முறைகேடு கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
Kolkate case update: கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ-க்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்
''சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து 24 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்று நாட்டு மக்கள் கேட்கின்றனர். சிபிஐ நடந்து கொள்வதை பார்த்தால் இந்த வழக்கில் சீரியஸாக செயல்படவில்லை என்பது தெரிகிறது'' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நீலாங்கரை நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரில் காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு வீடு மற்றும் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
மருத்துவ மாணவி கொல்லப்பட்டவுடன், அதை சந்தீப் குமார் கோஷி தற்கொலை என மாணவியின் பெற்றோரிடம் கூறியிருந்தார். மேலும் மருத்துவ மாணவியின் கொலையை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஊழலில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பல்வேறு சிலைகளை கண்டுபிடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற பாராட்டை பெற்ற ஓய்வு பெற்றவர் ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
NEET Question Paper Leak Case Chargesheet in Patna Court : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாட்னாவின் கோபால்பூரை சேர்ந்த நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர் யாத்வேந்து ஆகியோர் மாணவர்களிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டது தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.
திமுகவின் கைபாவையாகவே சில காவலர்கள் மாறிவிட்டார்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வரும் போது திருத்தம் செய்ய பாப்போம்; பழி வாங்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.