என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் - ராமதாஸ் குற்றச்சாட்டு!
தைலாபுரத்தில் உள்ள எங்களது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தைலாபுரத்தில் உள்ள எங்களது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..