ஆளுநர் இல. கணேசனுக்கு தலையில் காயம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை!
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
போலீசார் விசாரணையில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் நோயாளியின் தங்க நகைகளை திருடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் போலவே ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு நோயாளிகளிடம் கைவரிசை காட்டியுள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் தமிழகத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் சடலம் பீகாருக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராடி வருகின்றனர்.
திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ பரவல் இல்லை என்றும், கட்டாய முக கவசம் என தவறான செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் மற்றும் சிறுமியின் தாய் உட்பட 13 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலாவதியான சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்; சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி
மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுவதால், போலீசார் குவிப்பு; ஆம்புலன்ஸை ஆதரவாளர்கள் அடித்து உடைத்ததால் பரபரப்பு
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவர் - ஊழியர் இடையே மோதல்
விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி . விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.
நெஞ்சுவலி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி