பிரதமரின் 74வது பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எல்.முருகனிடம் கேட்டபோது, ‘இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முறையாக எடுப்போம்’என்றார்.
புதுச்சேரி அரசு மின்கட்டண உயர்வை திரும்பப்பெறவில்லை என்றால் அதிமுக சார்பில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா-முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது.
ஸ்டாலின் - திருமா சந்திப்பில் நடந்தது இதுதானா..? | Kumudam News24x7 | DMK | VCK | Thiruma | CMstalin
இனிமேல் இத்தனை ஜாதி பெயர்களோடு பத்திரிக்கை அடிக்காதீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார் என்றும் பாஜக, பாமகவை பற்றி பேச திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசியிருப்பது, திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.