K U M U D A M   N E W S

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, திருச்சி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர்

மதுரை மற்றும் திருச்சியில் அமையவிருக்கும் புதிய டைடல் பூங்காவிற்கு வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

கிருஷ்ணகிரி சம்பவம் – போராட்டத்தை அறிவித்த அதிமுக

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. தமிழக அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வரும் 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திமுக அலுவலகத்தை இடிக்க உத்தரவு

மதுரை முல்லை நகரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்து அகற்ற உத்தரவு.

கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.. ஹெச்.ராஜா-அண்ணாமலை மனிதரே இல்லை- சேகர் பாபு சாடல்

பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல, அவர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார்.

பிப்ரவரி 13-ல் பொதுத்தேர்வு ஆலோசனைக் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பொதுத்தேர்வு தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திமுக அரசு வெட்கப்பட வேண்டும் -இபிஎஸ் கண்டனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - இபிஎஸ்

நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 நாள் பயணமாக நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பெரியார் சிலை அவமதிப்பு கண்டிக்கத்தக்கது.. சீமான் பற்றி பேச விரும்பவில்லை- உதயநிதி ஸ்டாலின்

பெரியார் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் சீமானை பற்றி  தான் பேச விரும்பவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.