K U M U D A M   N E W S
Promotional Banner

ஸ்டாலின்

காமராஜருக்கு பிறகு திமுக ஆட்சியில் தான்...பள்ளிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

காமராஜர் ஆட்சிக்குப் பிறகு அதிக பள்ளிக்கட்டிடங்களை உருவாக்கி வருவது நாங்கள் தான் என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மீனவர்கள் நலனில் முதல்வருக்கு அக்கறை இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், மீனவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் அலட்சியம் ஏன்?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தாமதமான அங்கீகாரமே இது.. கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணா பெயரை உச்சரிக்க அருகதை இருக்கிறதா?.. இபிஎஸ் காட்டம்

குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான்- அமைச்சர் கோவி.செழியன்

எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?- அன்புமணி சரமாரி கேள்வி

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

காவலர்கள் பதவி உயர்வு.. புதிய அரசாணை பிறப்பிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 50 இடங்களில் குடிநீர் ATM

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன?.. அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சரின் வாக்குமூலம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே உடனடியாக நடத்த வேண்டும் எனவும், சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விஎழுப்பியுள்ளார்.

‘ஸ்டிக்கர்’ ஒட்டி பழகிப்போன முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

மதுரை எய்ம்ஸ் 2026-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென்ற செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'கிலி' ஏற்படுத்தியுள்ளது" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர்.. இபிஎஸ் காட்டம்

"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிவி தினகரன் விமர்சனம்

வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எனது அறிக்கைகள் முதல்வரை உறுத்துகிறது.. இபிஎஸ் பதிலடி

"கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்தபடி கூறுவதுதான் அரைவேக்காட்டுத் தானம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் – அண்ணாமலை கண்டனம்

கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விருதுநகர் ஆட்சியரின் முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நீங்கள்தான் போலி விவசாயி.. முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி

விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைக் காப்பதில் தமிழக அரசு படுதோல்வி- அன்புமணி விமர்சனம்

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Direct-ஆ முதல்வர் தானா? - விஜய்யை விமர்சனம் செய்த சைதை சாதிக்

வார்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை, Direct-ஆ முதல்வர் தானா? என தவெக தலைவர் விஜய்யை திமுக பேச்சாளர் சைதை சாதிக் விமர்சனம் செய்துள்ளார்.