K U M U D A M   N E W S

AI

#BREAKING: நெல்லையில் மீண்டும் ஓர் நாங்குநேரி சம்பவம்.. நடந்தது என்ன? | Kumudam News

பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சில்லென மாறிய தமிழ்நாடு – வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த குண்டுமணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நிர்வாகிக்கு நேர்ந்த சோகம்... போரட்டத்தில் குதித்த அதிமுகவினர்.. ஸ்தம்பித்த சாலை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கழிவுநீரில் மூழ்கிய மதுரை... போராட்டத்தில் குதித்த மக்கள்

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

24 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் டிராபிக்..GST சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாமல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு.. மாணவிகள் மயக்கம்... முற்றுகையிட்ட பெற்றோர்கள்

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பெட்ரோல் குண்டு வீசிய மாணவன்.. தட்டி தூக்கிய போலீஸ்

மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

காவலரிடம் அநாகரீக பேச்சு... மெரினா ஜோடி தாக்கல் செய்த ஜாமின் மனு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.