கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.