“திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” - சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!
சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில்,கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவுடன் ஏற்பட்ட நெருடல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடவுள்ள நிலையில், சோனியாவும் ராகுலும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,929 கன அடியில் இருந்து 18,094 கன அடியாக அதிகரிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஒட்டிய வெள்ளம்,
தேனி பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.