அமராவதி உணவகத்தில் 2-வது நாளாக ED சோதனை: சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர ஆய்வு!
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.