கொட்டி தீர்த்த கனமழை.. தேங்கிய மழைநீர்.. பொதுமக்கள் அவதி
கனமழையில் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கனமழையில் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
6 செ.மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் தமிழக அரசு மீதும், சென்னை மாநாகராட்சி மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியொடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் பயணிகளின் வரத்து குறைவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளது - T. M. Anbarasan
வெறும் அறிக்கையை வைத்து கொண்டு பேரிடரை எதிர்கொள்ள முடியாது - RB Udhayakumar Speech
சென்னையில் தொடரும் கனமழையால் தரமணியில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது
கனமழை காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்தி சேவைகளும் செல்ல முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு
தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு