குடை ரெடியா இருக்கா? இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.