K U M U D A M   N E W S

”எங்க சார் தப்பு பண்ணல” போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வாயிலை பூட்டி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”சுள்ளான்கள எல்லாம் அடுத்த எம்ஜிஆர்-னு சொல்றாங்க..” தவெக விஜய்க்கு தக் லைஃப் கொடுத்த பிரபலம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பங்கமாக கலாய்த்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் 30 நாட்கள் கூட அரசியலில் தாக்குப்பிடிக்க மாட்டார் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

குஷியில் கோவை மக்கள்.. முழு கொள்ளளவை எட்டவுள்ள சிறுவாணி அணை

கோவை சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தவெக முதல் மாநில மாநாடு... தொடங்கிய கலந்தாய்வு கூட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையிலான கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.

புதிய உச்சம் தொடும் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள்.. அரசுக்கு கோரிக்கை வைத்த மக்கள்

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் - காரணி இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மாநில மனித உரிமை ஆணையத்தின் உரிமையை பறிக்கும் திமுக.... இபிஎஸ் கண்டனம்!

மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் திமுக அரசு மூக்கை நுழைப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

”திமுக ஆட்சியில் மனித உரிமை ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது” - இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மீண்டும் தொடங்கியது மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது. 

தங்கம் விலை கிடு கிடு உயர்வு.... ரேட்ட கேட்டாலே தலை எல்லாம் சுத்துது!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 57,920க்கு இன்று (அக். 18) விற்பனை செய்யப்படுகிறது.