K U M U D A M   N E W S
Kumudam Ad

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

GOAT: கோட் ரிலீஸாகும் திரையரங்குகளில் தவெக கொடி... விஜய்யின் ரகசிய உத்தரவு என்ன..?

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இத்திரைப்படம் ரிலீஸாகும் திரையரங்குகளில் தவெக கொடியை பயன்படுத்துவது குறித்து விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாசு குடோனில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Vetrimaaran: தமிழ் சினிமாவின் தனித்துவம்... திரைமொழியின் அசுரன்... வெற்றிமாறனின் வெற்றிப் பயணம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 7 படங்கள் இயக்கியுள்ள வெற்றிமாறன், 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளார். திரை மொழியின் அசுரனான வெற்றிமாறனின் வெற்றிப் பயணம் குறித்து இப்போது பார்க்கலாம்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாணவர் எடுத்த விபரீத முடிவு

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என தெரிய வந்தது

Sarathkumar: ஹேமா கமிட்டி... கேரவனில் கேமரா... பிக் பாஸ் நடிகை யார்..? ரவுண்டு கட்டிய சரத்குமார்!

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து பேசிய நடிகர் சரத்குமார், கேரவனில் கேமரா இருந்தது பற்றிய ராதிகாவின் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்தாரா நிவின் பாலி..?

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நடிகர் நிவின்பாலி விளக்கம் அளித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்... 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.