உச்சநீதிமன்றம் வரை போய் கரியைப் பூசியும் திருந்தவில்லை.. ஆளுநர் அறிக்கைக்கு நேரு பதிலடி!
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.