K U M U D A M   N E W S

mi

#BREAKING : மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு

சித்தராமையா மீது வழக்குப்பதிவு.. அமலாக்கத்துறை வைத்த செக்

மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

மூடா முறைகேடு... சித்தராமையாவுக்கு எதிராக ED வழக்கு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடரும் விவாகரத்து சர்ச்சை: “பேச்சுவார்த்தைக்கு தயார்..” ஆர்த்தியின் பதிலடி

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.

அக்.4-ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் அக்டோபர் 4-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னைக்கு வர வேண்டாம்... தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்

தன்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலியல் வழக்கு... நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இளம் நடிகை ஒருவர் நடிகர் சிக்கிக் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.... குடையை மறக்காதீங்க மக்களே!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.. தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.