சென்னை வங்கி மோசடி வழக்கு: 14 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி குவைத்தில் கைது!
சென்னை பாங்க் ஆஃப் பரோடாவில் ₹3.5 கோடி மோசடி செய்துவிட்டு, 14 வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி முனாவர் கான், சர்வதேச போலீசாரின் உதவியுடன் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.