K U M U D A M   N E W S

RSS ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது... காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணை

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.  

முல்லை பெரியாறு விவகாரம்.. EPS-க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இபிஎஸ் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்டை மாநில நதிநீர் பிரச்னையில் அரசியல் லாபம் கருதி இபிஎஸ் வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக மக்களை குழப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்... ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் வலியுறுத்தல்

10% வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இழந்த வாக்குகளை மீட்கும் வகையில் செயல்பட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் 

RSS March : எதிர்காலத்தில் இப்படி செய்யக் கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

RSS March in Tamil Nadu : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடகை பைக்குகளுக்கு செக்... ஆட்டோ ஓட்டுனர்கள் அதிரடி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். 

செவி சாய்க்காத சாம்சங் நிறுவனம்.. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

விஜய்யால் பாஜகவிற்கு தான் பாதிப்பு.. திராவிட கட்சிகளுக்கு இல்லை - துரை வைகோ அதிரடி

Durai Vaiko About Actor Vijay Party : நடிகர் விஜய் சமூக நீதியையும் மதசார்பின்மையும் முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாஜகவிற்கு தான் பாதிப்பே தவிர, திராவிட கட்சிகளுக்கு அல்ல என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.

GOAT OTT Release Date : ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் கோட்... எப்போ, எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா..?

GOAT OTT Release Date : விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காரில் இருந்து குதித்து தப்பியோடிய ‘குருவி’.. கைதானவர்களின் வாக்குமூலம் என்ன?

சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.