பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.