K U M U D A M   N E W S

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணியத்தோடு நடந்துகொள்ளுங்கள்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

“கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.