கவரைப்பேட்டை ரயில் விபத்து: செல்போன்கள் ஆய்வு.. தீவிர விசாரணையில் ரயில்வே காவல்துறை
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.
மதுரையில் பெய்த கனமழையால் அங்குள்ள உழவர் சந்தை, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.
வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டாணா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் பெங்களூரு கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.
ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது.
நீர்வரத்து அதிகரிப்பால் மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மற்றும் திருப்பூரில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுபெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள். சாலைகளில் வாகனங்களே இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் மக்கள் மீட்பு
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் மூழ்கின. குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கல்லூரிப் பேருந்து சிக்கியது.
ஈரோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.