K U M U D A M   N E W S
Kumudam Ad

Tamilnadu Rain: ”மீட்புப் பணிகள் இல்லாமல் ஆலோசனைக் கூட்டமா?” திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளாத ஸ்டாலினின் திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"24 மணி நேரமும் வேலை" மெல்ல நெருங்கும் அபாயம் - அதிகாரிகளுக்கு உடனே பறந்த உத்தரவு

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

4 மாவட்டங்களுக்கு விட்டாச்சு லீவு.. மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் - உதயநிதி

கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... விரைந்த போலீசார்.. ஊட்டியில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்

“மழை நீர் தானாகவே வெளியேறிவிடும்” - சென்னை மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்

சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நடிகை சித்ரா வழக்கில் புதிய திருப்பம்.. ஹேம்நாத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளி கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(அக்.14) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை... ஆவின் நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பால் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஆவின் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை... தீயணைப்பு துறையினருக்கு பறந்த முக்கிய உத்தரவு

மழைக்கால மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத் துறை அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.