இந்தியாவில் முதல்முறை: கேரள நீதிமன்றங்களில் AI தொழில்நுட்பம் அறிமுகம்!
இந்தியாவில் முதல் முறையாக, கேரள நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக, கேரள நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி இன்று மாலை அறிவிக்கவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.
கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.
”கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுள்ளது. கொங்கு மண்டல வெற்றிக்கான ரகசியம் தேர்தல் முடிவில் வெளியாகும்” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.