சாலை முழுதும் துர்நாற்றம்...கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராம மக்கள் தங்களது ஊருக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராம மக்கள் தங்களது ஊருக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மின்சாரம் தாக்கி பெண் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் விசாரணை குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.
சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
Gold Rate Today in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 7,535க்கு விற்பனையாகிறது.
வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே ராவத்துநல்லூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி அக்கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.