K U M U D A M   N E W S
Promotional Banner

Update

கனமழை எதிரொலி - மூடப்ப்பட்ட சுரங்கப்பாதைகள்

சென்னையில் கனமழை காரணமாக CB சாலை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம், MRTS ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது

ஒகேனக்கலில் அதிகரித்த நீர்வரத்து பரிசல் இயக்க நீடிக்கும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு

பெங்களூருவையும் விட்டு வைக்காத கனமழை..துணை முதல்வர் நேரில் ஆய்வு

தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். 

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது

#JUSTIN: Chennai Rains: களத்தில் அதிமுக - EPS அறிவிப்பு

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் குழு அமைப்பு

#BREAKING: சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்

மழைநீர் தேங்கியதன் காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்

ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்..காரணம் என்ன?

கனமழை எதிரொலியால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரத்தான ரயில்கள் ஆவடியில் இயக்கப்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கிறது.. வானிலை மையம் கொடுத்த தகவல்

சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#BREAKING: தி.மலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணி.. "இது மட்டும் இன்னும் மாறல.."

வேலூரில் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்

#BREAKING: ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்.. என்ன காரணம்?

சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் ரயிலுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருப்பு

"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி

"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி

#BREAKING: கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு

ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து மீட்பு பணி குறித்து அறிவுரைகள் வழங்கினார்

#BREAKING: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-நெல்லூர் இடையே கரையை கடக்கும்

அக். 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது

#BREAKING: காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

Chennai Rains: சென்னையில் தீவிரமாகும் மழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... முக்கியமான அப்டேட்!

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ChennaiRain: சென்னை மழை... டெஸ்ட் மேட்ச் மாதிரி தரமான சம்பவம் இருக்கு... தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!

சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புவது நல்லது என, தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.

Chennai Red Alert: சென்னைக்கு இன்றே ரெட் அலர்ட்..! இயல்பை விட 81% கூடுதலாக மழை... மக்களே உஷார்!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் இயல்பை விட 81% அதிகம் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“பல இடங்களில் தண்ணீர் தேக்கம்... சென்னை மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்...”ராமதாஸ் விளாசல்!

6 செ.மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் தமிழக அரசு மீதும், சென்னை மாநாகராட்சி மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Chennai Rain: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியொடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளது - T. M. Anbarasan

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளது - T. M. Anbarasan

"வெறும் அறிக்கையை வைத்து கொண்டு பேரிடரை எதிர்கொள்ள முடியாது"

வெறும் அறிக்கையை வைத்து கொண்டு பேரிடரை எதிர்கொள்ள முடியாது - RB Udhayakumar Speech

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் சாலைகள்

சென்னையில் தொடரும் கனமழையால் தரமணியில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது

”ஆம்புலன்ஸ் கூட போக முடியலயே”.. இரவு முழுவதும் பெய்த மழை..மூழ்கிய சாலைகள்

கனமழை காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்தி சேவைகளும் செல்ல முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு