தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள நாடியம்மன் கோயில் வளாகத்திலும், ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அங்குக் குவிந்த பெண்கள், மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து நீரோடைகளில் விட்டுச் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி, தாலிக்கயிறுகளை மாற்றிக்கொண்டனர். புதுமணத் தம்பதிகள், திருமண மாலைகளைக் குளத்தில்விட்டு, தாலிக்கயிறுகளை மாற்றிக் கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. கோவில் முன்பு உள்ள குண்டத்திற்கு உப்பு மிளகு தூவியும், நெய் தீபம் ஏற்றியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் சீறிப்பாயும் அருவியின் நீருக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டது. ஸ்படிக லிங்கம், அகஸ்திய மாமுனிவர், லோகமித்ரா அம்மன், சக்தி பீடம் ஆகிய சுவாமிகளுக்குத் தீபாராதனைகள் காட்டப்பட்டு, பெண்களுக்குத் தாலி கயிறு, வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. அகஸ்திய மாமுனிவர் மற்றும் யோகமித்ரா அம்மனை வழிபட்ட பெண்கள், திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் சுமங்கலி பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தனர்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர்வரத்து குறைந்ததன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் புனித நீராடினர். புதுமண தம்பதியினர் புத்தாடை அணிந்து, காவேரி அம்மனை வழிபட்டனர்.இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது
சேலம் மாவட்டம் ஏத்தப்பூரில் உள்ள முத்து மலை முருகன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வள்ளி தெய்வானையுடன், ராஜ அலங்காரத்தில் காட்சி தந்த முருகனை தரிசித்த பக்தர்கள், 146 அடி உயர முருகன் சிலைக்கு முன்பு நின்று, திருமண தம்பதிகள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில், பக்தர்கள் காவடிகளுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தங்க கவசத்தில் அலங்காரம் செய்யப்பட்ட மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவரை பக்தர்கள் தரிசித்தனர்.