நவகிரஹங்கள் ஒன்பதுமே குறிப்பிட்ட கால இடைவெளியில நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதே சமயம், குரு, ராகு-கேது, சனி கிரஹங்களின் நகர்வுகள் மட்டுமே அனைவராலும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்றும், திருக்கணிதப்படி 14.05.2025 அன்றும் குருபெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. இதனடிப்படையில், சிம்மம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.. அதன் விவரம் பின்வருமாறு-
சிம்மம்:
உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கும் எட்டாம் இடத்துக்கும் உரியவரான குரு பகவான், இதுவரை இருந்த பத்தாம் இடத்தில் இருந்து இப்போது பதினோராம் இடத்துக்குப் போறார்ங்க இந்த சமயத்துல அவரோட விசேஷ பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்க ராசிக்கு முறையே மூன்று, ஐந்து, ஏழாம் இடத்தில் பதியுதுங்க. இவை முறையே சகோதரம் தைரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தானம்க.
இந்த சமயத்துல திருக்கணிதப்படி பெயர்ச்சியான சனிபகவான், உங்க ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கார்ங்க. அடுத்து வர உள்ள ராகு, கேது பெயர்ச்சியில ராகு உங்க ராசிக்கு ஏழாம் இடத்துக்கும், கேது உங்க ஜன்ம ஸ்தானத்துக்கும் வர்றார்ங்க. இத்தகைய கோள்சார அமைப்புகளையும் கணக்கில் கொள்ளும்போது உங்களின் உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய காலகட்டமாக இது இருக்கும்க.
பணத்தை கையாள்வதில் கவனமாக இருங்க:
பணியிடத்துல உங்க திறமை பேசப்படும்க. இதுவரை எதிரிகளால வீண் பழி சுமந்திருந்த நிலை மாறும்க. சூழ்ச்சி வலையில சிக்கித் தவிச்ச நிலை மாறி, சுதந்தரக் காற்றை சுவாசிக்கும் சூழல் உருவாகும்க. எதிர்பார்த்த இட மாற்றம், திறமைக்கு உரிய பதவி, ஊதிய உயர்வு கிட்டும்க. திட்டமிட்டும், சோம்பல் இல்லாமலும் செயல்பட்டா, எதிர்காலமும் தித்திக்கறமாதிரி அமையும்க. மேலதிகாரிகள் ஆதரவு மனதுக்கு மகிழ்ச்சி தரும்க. சிலர் முதன்முறையாக வெளிநாடு செல்லவும் வாய்ப்பு உண்டுங்க. கவனச் சிதறலும் மறதியும் எட்டிப் பார்க்கலாம்க முக்கியமான கோப்புகளை அலட்சியத்தாலும் அவசரத்தாலும் இடம் மாற்றி வைச்சுட்டு திண்டாட நேரலாம்க. அவசியமானவற்றை சிறுகுறிப்பு எடுத்து வைச்சுக்குங்க. பணத்தைக் கையாளும் பொறுப்புல உள்ளவங்க, நிதானம், கவனத்தை சிதறவிடாம இருங்க. பணியிடத்துல வீண் களியாட்டங்களைத் தவிருங்க.
Read more: கடக ராசிக்காரர்களே இது திருப்பி கொடுக்கும் நேரம்.. குரு பெயர்ச்சி பலன்கள் 2025
வீட்டுல விசேஷங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்தொடங்கும்க. உறவுகள் மத்தியில உங்க சொல்வாக்கின் செல்வாக்கு அதிகரிக்கும்க. சலிப்பே சிந்தனை புலம்பலே வாழ்க்கைன்னு இருந்த நீங்க இனி புதுமலர்ச்சி பெறும் சந்தர்ப்பங்கள் வரும்க. இந்த சமயத்துல எதற்காகவும் அதீத உணர்ச்சிவசப்படல் வேண்டாம்க. கடுமைப் பேச்சைத் தவிர்த்தா, சகலமும் சந்தோஷமாகும்க. சகோதர வழி உறவுகள்கிட்டே வீண் தரக்கம் வேண்டாம்க. வாரிசுகளை அன்பால திருத்துங்க. பூர்வீக சொத்துல விட்டுக் கொடுத்துப் போறது நல்லதுங்க. வரவை சுப செலவாக்கறதும், சேமிப்பை அதிகரிக்கறதும் நல்லதுங்க. சுபகாரியங்கள், பெற்றவங்க, பெரியவங்க ஆசியோட கைகூடும்க. வீடு, மனை வாங்கும் சமயத்துல பத்திரங்களை கவனமா படியுங்க. எந்த சமயத்திலும் குடும்ப விஷயங்களுக்குப் பஞ்சாயத்துப் பேச மூன்றாம் நபரை அணுக வேண்டாம்க.
உங்க பெருமையே ஊரே பேசும்:
வியாபாரத்துல நேரான முறைகள்ல செயல்பட்டா சீரான வளர்ச்சி ஏற்பட்டு, லாபம் பலமடங்கு அதிகரிக்கும்க. தெரியாத தொழில்ல புரியாத மொழி பேசறவங்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்க. வர்த்தகக் கடன்களை முறையாகச் செலுத்தறதும் கணக்குகளை குறிச்சு வைக்கறதும் அவசியம்க. பரம்பரைத் தொழில்ல மாற்றங்கள் செய்வது ஏற்றத்துக்கு வழிசெய்யும்க. அதை உரிய அனுமதி பெற்றுச் செய்யுங்க. அயல்நாட்டு வர்த்தகம் நேரடி கவனம் இருந்தா, நிறைவான பலன் தரும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. உங்க பெருமையை ஊரே பேசும்க. அது தொடரணும்னா, செயல்கள்ல நிதானம் முக்கியம்க. தேவையற்ற வாக்குறுதியும் தெளிவில்லாத திட்டங்களும் கூடவே கூடாதுங்க. அவசரமுடிவுகளும் அலட்சிய க் கையெழுத்தும் உங்களை தவிக்க வைச்சுடலாம், எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து, மேலிடத்து அனுமதியோட செய்யுங்க.
Read more: மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: பொறுமைக்கும்- நிதானத்துக்கும் பரிசு காத்திருக்கு!
கலை, படைப்புத் துறையினர்க்கு முழு முயற்சிகள் இருந்தா, வாய்ப்புகள் வாசல்தேடி வரும்க. விடியல் வெளிச்சம் படற சமயத்துல முழுமையான அக்கறையோட செயல்பட்டா விருதுகளும் பாராட்டும் கிடைக்கும்க. செல்லும் இடங்களின் சட்டதிட்டங்களை மதிச்சு நடங்க.
மாணவர்கள் சோம்பலை உதறிட்டுப் படிச்சா சோதனைகளை விரட்டி சாதனைகள் செய்யலாம்க. சேர்ந்து படிக்கும் நட்பு, உங்களை சோர்ந்துபோகவிடாததாக அமைவது முக்கியம்க. அதுக்கு பெற்றவங்க ஆலோசனையும் பெரியவங்க வழிகாட்டலும் உதவும்க. தொலைதூரத்துக்கு நீங்களே வாகனத்தை ஓட்டுவதை தவிர்ப்பது நல்லதுங்க. சாலைப் பயணத்தை கவனமா மேற்கொண்டா, வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பானதா இருக்கும்க.
நரம்பு, அசிடிட்டி, அடிவயிறு, ஜீரண உறுப்புகள், அலர்ஜி, தலைவலி, மூட்டு வலி உபாதைகள் வரலாம்க. உணவை முறைப்படுத்துங்க. இந்தக் காலகட்டத்துல ஒருமுறை திருநள்ளாறு தலம் சென்று சுவாமி, அம்பாளை வணங்கிட்டு, சனி பகவானையும் ஆராதிச்சுட்டு வாங்க. அனுமனை எப்போதும் ஆராதியுங்க.வாழ்க்கை வசந்தமாகும்.
Read more: மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: பெண்களுக்கு யோகமான காலகட்டம் இனி ஆரம்பம்