ஆன்மிகம்

நடுவழியில் சாமியை நிறுத்தம்.. மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது சாமியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வடகலை - தென்கலை பிரிவினர் மோதிக்கொண்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நடுவழியில் சாமியை நிறுத்தம்.. மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!
மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்
உலக புகழ்பெற்ற அத்திவரதர் எழுந்தருளிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் தொடக்கியது. இதில், பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், வரதராஜ பெருமாள் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி பல்வேறு வீதிகளில் உலா வரும் நிலையில், கிழக்கு ராஜ வீதி பகுதியில் நடு சாலையிலேயே நாச்சியார் கோலத்திலிருந்து பெருமாளை நிறுத்தி வடகலை தென்கலை ஸ்தோத்தரம் பாடுவதில் பிரச்சனை மீண்டும் துவங்கியுள்ளது.

பிரம்மோற்ச்சவத்தில் அனுதினமும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார். இந்த வீதியுலாவின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையுமே சாமி மண்டகபடி கண்டருளிய போது மந்திர புஷ்பம் பாடுவதிலே வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல் போக்கானது நிலவி வருகிறது.

அந்த வகையில் இப்பிரம்மோற்ச்சவத்தின் 5-ஆம் நாளான‌ இன்று அதிகாலை தங்க பல்லக்கில் எழுந்தருளி நாச்சியார் திருக்கோவில் எழுந்தருளி இன்றைய தினம் பல்வேறு வீதிகளில் மண்டகபடி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் பேருந்து நிலையம் பின்புறம் வந்து கொண்டிருந்த பொழுது ஸ்தோத்திர பாடலை பாடும் பொழுது யார்‌ முன்பு என்பதில் போட்டா போட்டி போட்டு கொண்டதில் சாமியை நடு சாலையிலேயே நிறுத்தியபடி இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் போக்கானது ஏற்பட்டது.

இதனையெடுத்து உற்ச்சவத்தையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தென்கலை பிரிவினரை தடுத்த நிறுத்த பொழுது இருவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையெடுத்து இரண்டு தரப்பினரிடையேயும் பேச்சுவார்ததை நடத்தி நீண்ட போராட்டத்திற்கு பிறகு சாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல் போக்கானது தொடர்ந்து அதிகரித்து பக்தர்களுக்கிடையே முகசுழிப்பையும்,சிரமத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறையானது உரிய நடவடிக்கை எடுத்து பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனச் செய்ய ஏதுவாக வழிவகைகளை மேற்கொள்ள வேண்டுமென பக்தர்கள் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.