தமிழ்நாடு

இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூல்.. மன உளைச்சலில் வாடிக்கையாளர்.. நுகர்வோர் ஆணையம் போட்ட பலே உத்தரவு

இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூல்.. மன உளைச்சலில் வாடிக்கையாளர்.. நுகர்வோர் ஆணையம் போட்ட பலே உத்தரவு
மன உளைச்சலில் வாடிக்கையாளர்.. நுகர்வோர் ஆணையம் போட்ட பலே உத்தரவு
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல இனிப்பகத்தில், கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர், கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் எனும் இனிப்பை வாங்கியுள்ளார். ஒரு கிலோ 1700 ரூபாய் என்ற அடிப்படையில் 425 ரூபாய் விலை வசூலிப்பதற்கு பதில் 450 ரூபாய் வசூலித்துள்ளனர்.

இதை அறிந்த ரவிசங்கர், கடையில் இருந்த பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மென்பொருள் கோளாறு காரணமாக கூடுதலாக 25 ரூபாய் வசூலிக்கப்பட்டு விட்டதாக கூறிய பணியாளர்கள், 25 ரூபாயை திருப்பி அளித்துள்ளனர்.

30 நிமிட வாதத்திற்கு பிறகு 25 ரூபாயை திரும்ப பெற்றதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ரவிசங்கர் சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

புகார் மனுவை விசாரித்த ஆணையம், கூடுதலாக வசூலித்த தொகையை திருப்பி அளித்து இருந்தாலும் கூட, இனிப்பகத்தின் செயல்பாடு சேவை குறைபாட்டை காட்டுகிறது. மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை ஆற்றுப்படுத்தும் வகையில் 15 நாட்களில் ஒரு கிலோ பாதாம் பிஸ்தா ரோல் இனிப்பை அவரது வீட்டுக்கே சென்று வழங்க வேண்டுமென இனிப்பகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.