ஆன்மிகம்

துலாம் முதல் மீனம் வரை.. ஜோதிடர் ஷெல்வீயின் துல்லியமான இந்தவார ராசிபலன் கணிப்பு

weekly horoscope predicted by astrologer shelvi: துலாம் முதல் மீனம் ராசி வரையிலான இந்த வார ராசிப்பலன்களை குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

துலாம் முதல் மீனம் வரை.. ஜோதிடர் ஷெல்வீயின் துல்லியமான இந்தவார ராசிபலன் கணிப்பு
weekly horoscope predicted by astrologer shelvi
துலாம்:

சிந்தித்துச் செயல்பட்டால், சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். திட்டமிட்டு உழைத்தால், எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடும். கைகூடும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். செய்யும் தொழிலில் சின்சியர் உழைப்பிருந்தால், சீரான வளர்ச்சி வரும். அரசு, அரசியல் துறையினருக்கு எதிர்பாராத நற்செய்தி கிட்டும். கலை, படைப்புத் துறையினர் படைப்பு ரகசியங்களைப் பகிர வேண்டாம். இரவுப் பயணம் தவிருங்கள். கண்கள், பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்டமகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

விருச்சிகம்:

சுணக்கம் தவிர்த்தால், எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு பணிசார்ந்த பயண வாய்ப்புகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். இளம் வயதினர், பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனம் மாற்ற சந்தர்ப்பம் வரலாம். புதிய முதலீடுகளில் நிதானம் முக்கியம். உழைப்புக்கு ஏற்ப தொழில் செழிக்கும். அரசு, அரசியல் துறையினருக்கு பெருமை, புகழ் சேரும். கலை, படைப்புத் துறையினர் வீண் புலம்பல் தவிருங்கள். தலைவலி, வயிறு உபாதை, பூச்சித் தொல்லை வரலாம். மாருதியைத் துதியுங்கள். மங்களங்கள் சேரும்.

தனுசு:

அவசரமும் அலட்சியமும் தவிர்க்க வேண்டி வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் கவனச் சிதறல் கூடாது. பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். புறம் பேசுவது, கேட்பது கூடாது. குடும்பத்தில் குதர்க்கம் தவிர்த்தால் குழப்பம் மறையும். சுபகாரியத் தடைகள், குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். பழைய கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்கள். செய்யும் தொழிலில் முதலீட்டை திட்டமிட்டுச் செய்யுங்கள். அரசு அனுமதியில் அலட்சியம் கூடாது. அரசு, அரசியல் சார்ந்தவர்கள் அமைதியைக் கடைப்பிடியுங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் கவனியுங்கள். அலர்ஜி, படபடப்பு, ஜீரண உபாதைகள் வரலாம். பைரவரைக் கும்பிடுங்கள். வாழ்க்கை பசுமையாகும்

மகரம்:

தற்பெருமையைத் தவிர்த்தால், தடைகள் எல்லாம் தகரக் கூடிய’ காலகட்டம். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு தரப்பட்டாலும், அது அது உங்கள் திறமையைப் பரிசோதிப்பதற்காகவே இருக்கும். உணர்ந்து செயல்பட்டால் உயர்வுகள் வந்து சேரும். இல்லத்தில் இனிமை நிலவும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். புதிய அறிமுகங்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள். செய்யும் தொழிலில் தஸ்தாவேஜுகளை பத்திரமாக வையுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர் மேல் வீண்பழி வரலாம் கவனமாக இருங்கள். கலைஞர்கள் முயற்சிகளால் வெல்லலாம். வாகனத்தில் செல்லும்போது வேகம் வேண்டாம். வயிறு, முதுகு, கண் உபாதைகள் வரலாம். சிவனைக் கும்பிடுங்க. சிரமங்கள் தீரும்.

Read also: மேஷம் முதல் கன்னி வரை.. ஜோதிடர் ஷெல்வீயின் துல்லியமான ராசிபலன் கணிப்பு

கும்பம்:

அமைதியாகச் செயல்பட்டால், அநேக நன்மைகள் கிட்டக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் திறமை பாராட்டப்படும். உங்கள் பொறுப்புகளில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். இல்லத்தில் இனிய வார்த்தைகளைப் பேசுங்கள். உறவுகளிடம் வீண் கோபம் வேண்டாம். வரவு அதிகரிக்கும். அதை சேமிப்பது நல்லது. அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் அதீத முதலீடு வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிகளால் வெல்லலாம். வாகனத்தில் வேகத்தைத் தவிருங்கள். அடிவயிறு, பாதம், முதுகுத்தண்டுவட உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.

மீனம்:

வாக்கிலும் செயலிலும் நிதானம் தேவைப்படும் காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், உரிய பாராட்டு நிச்சயம் கிட்டும். வீட்டில் விசேஷங்கள் ங்கள் வரத் தொடங்கும். வாக்கில் இனிமை இருந்தால், வாழ்க்கையும் இனிக்கும். அசையும் அசையா சொத்து சேரும். உடன்பிறந்தோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வரவுடன் செலவும் சேர்ந்தே வரும். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு அடக்கமே ஆனந்தம் தரும். கலைஞர்கள், படைப்பாளிகள் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. தலைவலி, அடிவயிறு உபாதைகள் வரலாம். சிவபெருமான் வழிபாடு, சிறப்பான நன்மை தரும்.