சென்னை பெரம்பூரில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு
திருச்சி சிவா பேசும்போது, தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என காமராஜர் மாநிலம் முழுக்க கண்டனக்கூட்டங்களை நடத்தி வருகிறார். காமராஜருக்கு ஏசி வசதி இல்லை என்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடும். அதற்காக காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய சொல்லி அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டார்.
திமுக அரசை எதிர்த்து தான் காமராஜர் பேசுகிறார். ஆனால், காமராஜரின் உடல் நலன் கருதி கருணாநிதி ஏசி வசதி ஏற்படுத்த சொன்னார். காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னர் கருணாநிதி கைகளை பிடித்துக்கொண்டு நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் கப்பாற்ற வேண்டும் என சொன்னார்” என திருச்சி சிவா குறிப்பிட்டு பேசி இருந்தார். இது தமிழக அரசியல் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிவா எம்.பி விளக்கம்
எளிமையின் சிகரம் என போற்றப்படும் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா எப்படி இதுபோல் பேசலாம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்.பி, மாணிக்கம் தாகூர் எம்.பி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காமராஜர் குறித்து தான் பேசியதை விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என எல்லோரையும் அன்புடன் வேண்டிக்கொள்வதாக திமுக துணைப்பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காமராஜரை போற்றியவர் பெரியார்
இதைத்தொடர்ந்து கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு! அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல.
மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!” என பதிவிட்டுள்ளார்.