ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 5:59 மணிக்கு PSLV ராக்கெட் ஏவப்பட்டது. துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (PSLV-C61) மூலம் EOS-09-ஐ (பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை) வெற்றிகரமாக ஏவிய நிலையில், மிஷன் முழுமையாக நிறைவேறாத காரணத்தினால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். EOS-09 இஸ்ரோவின் 101 வது செயற்கைக்கோள் ஏவுதல் ஆகும்.
விவசாயம், வனவியல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு செயற்கைக்கோளின் தொடர்ச்சியான படங்கள் மிக முக்கியமானவை. EOS-09 என்பது C-band செயற்கை துளை ரேடார் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு மேம்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது பகல் அல்லது இரவு என அனைத்து வானிலை நிலைகளிலும் பூமியின் மேற்பரப்பின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைப் பிடிக்க முடியும். இந்தத் திறன் பல துறைகளில் இந்தியாவின் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருந்தது.
தோல்வியடைந்தது பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம்:
மேற்குறிப்பட்டதன் பொருட்டு விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி புவியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படவில்லை. முதல் இரண்டு அடுக்கு வெற்றிக்கரமாக பிரிந்த நிலையில், மூன்றாவது அடுக்கு பிரிய முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மணீஷ் புரோஹித், EOS-09 என்பது முந்தைய RISAT-1 செயற்கைக்கோளின் தொடர்ச்சியான பணி என்று குறிப்பிட்டு இருந்தார். "இதன் மூலம் எல்லைகள் மற்றும் கடற்கரைகளில் கண்காணிப்பை பலப்படுத்த முடியும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், குறிப்பாக சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, முக்கியமானதாகக் கருதப்படும் தீவிரவாத ஊடுருவல் அல்லது சந்தேகத்திற்கிடமான இயக்கத்தை இந்த செயற்கைக்கோள் வாயிலாக எளிதாக கண்டறிய முடியும்” எனவும் தெரிவித்திருந்தார்.
தோராயமாக 1,696.24 கிலோ எடை கொண்ட EOS-09 செயற்கைக்கோள் புவியின் வட்டப்பாதையில் திட்டமிட்டப்படி நிலைநிறுத்த முடியாமல் தோல்வியடைந்துள்ள நிலையில், இதுக்குறித்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி-சி 61 ராக்கெட்டானது 7 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இவற்றில் பிரதான செயற்கைக்கோள் ANTSAT-1A (வணிக வானியல் செயற்கைக்கோள்) மற்றும் 6 சிறிய செயற்கைக்கோள்கள் அடங்கும். முன்னதாக ஏப்ரல் 22, 2024 அன்று விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Today 101st launch was attempted, PSLV-C61 performance was normal till 2nd stage. Due to an observation in 3rd stage, the mission could not be accomplished.
— ISRO (@isro) May 18, 2025