நடிகர் தேஜா சஜ்ஜா, ஷ்ரியா சரண், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேண்டசி படம் 'மிராய்'. வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தேஜா சஜ்ஜா, 'மிராய்' திரைப்படம் சர்வதேச தரத்தில் உருவாகியிருப்பதாகக் கூறிப் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
"ஹை-ஸ்பீட் ஆக்ஷன் காட்சிகள்"
"மிராய் என்றால் 'எதிர்காலத்தின் நம்பிக்கை' என்று அர்த்தம். இது ஒரு ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி மற்றும் எமோஷன் நிறைந்த படம். 3 முதல் 80 வயது வரையிலான அனைவரும் ரசிக்கும்படியாக இது எடுக்கப்பட்டுள்ளது. படத் தயாரிப்பில் பெரும் சவாலாக இருந்த வி.எஃப்.எக்ஸ் (VFX) காட்சிகளை, சர்வதேச தரத்திற்கு இணையாகக் கொண்டு வரக் கடுமையாக உழைத்துள்ளோம்.
மேலும், இப்படத்தில் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளோம். இதற்காகத் தாய்லாந்திலிருந்து கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை வரவழைத்துப் பயிற்சி பெற்றேன். படத்தில் நீங்கள் காணும் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நானே நேரடியாக நடித்தேன். இதற்காகத் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களில் 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன்." என்றார்.
"மிராய் படம் சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளது" - நடிகர் தேஜா சஜ்ஜா
சென்னை: நடிகர் தேஜா சஜ்ஜா, ஷ்ரியா சரண், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேண்டசி படம் 'மிராய்'. வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தேஜா சஜ்ஜா, 'மிராய்' திரைப்படம் சர்வதேச தரத்தில் உருவாகியிருப்பதாகக் கூறிப் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
"ஹை-ஸ்பீட் ஆக்ஷன் காட்சிகள்"
"மிராய் என்றால் 'எதிர்காலத்தின் நம்பிக்கை' என்று அர்த்தம். இது ஒரு ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி மற்றும் எமோஷன் நிறைந்த படம். 3 முதல் 80 வயது வரையிலான அனைவரும் ரசிக்கும்படியாக இது எடுக்கப்பட்டுள்ளது. படத் தயாரிப்பில் பெரும் சவாலாக இருந்த வி.எஃப்.எக்ஸ் (VFX) காட்சிகளை, சர்வதேச தரத்திற்கு இணையாகக் கொண்டு வர கடுமையாக உழைத்துள்ளோம்.
மேலும், இப்படத்தில் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளோம். இதற்காகத் தாய்லாந்தில் இருந்து கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை வரவழைத்து பயிற்சி பெற்றேன். படத்தில் நீங்கள் காணும் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நானே நேரடியாக நடித்தேன். இதற்காகத் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களில் 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன்." என்றார்.
சினிமாவில் ஃபேண்டசி ஆர்வம்
தொடர்ந்து ஃபேண்டசி படங்களில் நடிப்பதற்கான காரணம்குறித்துப் பேசிய தேஜா சஜ்ஜா, "எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லாத பல விஷயங்களைச் சினிமாவில் செய்ய விரும்புகிறேன். அதன் காரணமாகவே நான் ஃபேண்டசி படங்களை விரும்பித் தேர்வு செய்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும், 'ஹனு-மான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரைப்படங்களுக்குச் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நல்ல சந்தை உருவாகியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, 'மிராய்' படத்தையும் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாரித்துள்ளதாக அவர் கூறினார்.
இறுதியாக, செப்டம்பர் 12-ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படத்தை ரசிக்குமாறு தேஜா சஜ்ஜா வேண்டுகோள் விடுத்தார்.