மழை, புயல் சென்னையை புரட்டிப்போட்ட நேரத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தைத் திரையங்கில் மக்கள் கொண்டாடினர்கள். விமர்சன ரீதியாகவும், மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓடிடி-யிலும் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து தற்போது “பார்க்கிங்” படத்திற்காக 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2025ம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விருதுகளின் பட்டியலில், “பார்க்கிங்” படத்திற்கு மூன்று முக்கியமான விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த தமிழ் திரைப்படம்
சிறந்த திரைக்கதை – இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்
சிறந்த துணை நடிகர் – எம்.எஸ். பாஸ்கர்
இந்நிலையில், 3 தேசிய விருதுகளைப் பெற்ற பார்க்கிங் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகரும், எம்பியும் ஆன உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இந்தச் சந்திப்புக் குறித்த புகைப்படங்களும், தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில், “விருதே வாழ்த்திய தருணம்! உலகநாயகனை நேரில் சந்தித்தது பெருமிதம்! நன்றிகள் கமல்ஹாசான் சார் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
விருதே வாழ்த்திய தருணம். 🙏
— Harish Kalyan (@iamharishkalyan) August 3, 2025
ஒரு நண்பன் போல பேசினீர்கள் . அவருடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது.
எங்களை அழைத்து… pic.twitter.com/QmMHuU6mM5
இந்தப் படம் தேசிய விருதை வென்றது குறித்து தமிழ் சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.