சினிமா

Actor Karthik: நவரச நாயகனுக்கு திடீர்ன்னு என்னாச்சு..? கார்த்திக் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்!

நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கார்த்திக், மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கார்த்திக்கின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அப்டேட் கொடுத்துள்ளனர்.

Actor Karthik: நவரச நாயகனுக்கு திடீர்ன்னு என்னாச்சு..? கார்த்திக் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்!
நடிகர் கார்த்திக் ஹெல்த் அப்டேட்

சென்னை: மறைந்த நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக், அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 1980களில் தொடங்கிய கார்த்திக்கின் சினிமா கரியர், 90களில் உச்சம் தொட்டது. மெளன ராகம், அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், பொன்னுமணி, உள்ளத்தை அள்ளித்தா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சாக்லெட் பாய் ஹீரோ மெட்டீரியலான கார்த்திக், காமெடியிலும் ரசிகர்களை கலங்கடிப்பதில் கில்லாடி. இதனால் அவருக்கு திரையுலகில் நவரச நாயகன் என பெயர் கிடைத்தது.

கார்த்திக் கடைசியாக அந்தகன் படத்தில் நடித்திருந்தார். பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இன்னொரு பக்கம் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கும் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் கெளதம் கார்த்திக் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த சில ஆண்டுகளாகவே கார்த்திக்கின் உடல்நிலை குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. முக்கியமாக கொரோனா பரவலின் போது கார்த்திக்கிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஐசியூவில் அட்மிட்டாகியுள்ளதாக சொல்லப்பட்டது. அதன் பின்னரும் கார்த்திக்கின் உடல்நிலை பற்றி அடிக்கடி அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில், நேற்றிரவு முதல் கார்த்திக்கின் உடல்நிலை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகின. அதில், கார்த்திக் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், நடிகர் கார்த்திக் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கார்த்திக்கிற்கு எந்தவித உடல்நல பிரச்சினையும் இல்லை என்றும், அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் நடிகர் கார்த்திக்கின் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார் கார்த்திக். ஆனாலும் அவரது உடல்நிலை குறித்து அடிக்கடி வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.