இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜி.வி. பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆன பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார்.
‘பிளாக்மெயில்’ திரைப்படம்
திரைத்துறையினர் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் இவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இந்த நிலையில், மு.மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
ஃபேமிலி எண்டர்டெயினர்
‘பிளாக்மெயில்’ படம் குறித்து ஜிவி பிரகாஷ்குமார் கூறுகையில், பிளாக்மெயில் படத்தின் ஃபைனல் அவுட்புட் பார்த்த பிறகு, மு.மாறன் ஒரு கதை சொல்லியாகவும், இயக்குநராகவும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய முந்திய படங்களான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய இரண்டு படங்களுக்கும் நான் ரசிகன்.
‘பிளாக்மெயில்’ திரைப்படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது. அனைத்து வயதினரும் தங்களுடன் இந்தப் படத்தை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குநர் மாறன் தெளிவாக எழுதியிருந்தார். படத்தைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். குறைந்த நேரம் வரக்கூடிய சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும்” என்றார்.